“என்னைக் கொல்லத்தான் வந்திருக்கிறார்கள்” – நள்ளிரவில் கைது செய்யப்பட்ட எம்.பி பப்பு யாதவ் | MP Pappu Yadav has caused turmoil in Bihar politics.

Spread the love

பீகார் மாநிலம் பூர்னியா தொகுதி சுயேட்சை எம்.பி பப்பு யாதவ். இவர் 1995-ம் ஆண்டு வீடு வாடகைக்கு எடுத்து அதில் எம்.பி அலுவலகம் அமைத்ததால், வீட்டு உரிமையாளர் மோசடி வழக்கை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய வழக்கில் பாட்னா காவல்துறை நள்ளிரவில் அவரது இல்லத்தில் அதிரடியாகக் கைது நடவடிக்கை மேற்கொண்டது.

டெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்றுவிட்டு, நேற்று இரவுதான் பப்பு யாதவ் பாட்னா திரும்பினார். அவர் வீடு திரும்பிய ஒரு மணிநேரத்திற்குள்ளேயே மேற்கொள்ளப்பட்ட இந்தக் கைது நடவடிக்கை அரசியல் அரங்கில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பப்பு யாதவ்

பப்பு யாதவ்

காவல்துறை எம்.பி பப்பு யாதவை சூழ்ந்ததும், அவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, “இது சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கு. நாளை நான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்தது. அப்படி இருக்கும்போது, இப்போது ஏன் இந்த அவசரக் கைது? தேவைப்பட்டால் என்னை வீட்டுக் காவலிலேயே வைத்திருக்கலாம். நான் காவல் நிலையத்திற்கு வரமாட்டேன், நேரடியாக நீதிமன்றத்திற்கே வருவேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *