“என்னை எப்போதும் வியக்க வைக்கிறது” – மனைவி குறித்து ரிஷப் ஷெட்டி பெருமிதம் | “She always amazes me” – Rishabh Shetty is proud of his wife

Spread the love

ரிஷப் ஷெட்டி மற்றும் பிரகதி ஷெட்டி இருவரும் ஒரு திரைப்பட விழாவில் சந்தித்து காதல் வயப்பட்டனர். இருப்பினும், அந்தச் சமயத்தில் ரிஷப் ஷெட்டியின் சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருந்தது.

அதனால் பிரகதியின் குடும்பத்தினர் திருமணத்திற்குத் தயங்கினர். ஆனால், தங்களது காதலில் உறுதியாக இருந்த இந்த ஜோடி, 2017-ல் திருமணம் செய்துகொண்டது. இவர்களுக்கு ரன்வித் என்ற மகனும், ராத்யா என்ற மகளும் உள்ளனர்.

மென்பொருள் பொறியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரகதி, பின்னர் ஆடை வடிவமைப்பாளராக மாறி ரிஷப் ஷெட்டியின் படங்களுக்குப் பணியாற்றத் தொடங்கினார்.

சமீபத்தில் 2025-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘காந்தாரா சாப்டர் 1’ (Kantara Chapter: 1) படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரகதி ஷெட்டியின் பிறந்தநாளுக்கு ரிஷப் ஷெட்டியின் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *