ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திறப்பு விழா நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
உரையில் அவர் கூறுவதாவது,
என் அன்பு தமிழ் சங்கங்களே! இன்று புனிதமான ராமநவமி நாள். அனைவருக்கும் எனது இதயபூர்வமான ராமநவமி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் சங்ககால இலக்கியங்களிலும் ராமர் குறித்து கூறப்பட்டிருக்கிறது.
ராமநாதசுவாமி கோயிலில் வழிபட்டபோது, ஆசிகள் நிரம்பப்பெற்றவனாய் உணர்ந்தேன். இந்த நன்னாளில் ரூ. 8,300 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அர்ப்பணிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. இந்த ரயில் மற்றும் சாலைத் திட்டங்கள், தமிழ்நாட்டின் இணைப்புத் திறனை வலுப்படுத்தும்.
இது, பாரத ரத்னா டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் பூமி. அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றையொன்று நிறைவு செய்பவை என்று அவரது வாழ்க்கை நமக்கு காட்டுகிறது. அதேபோல, ராமேசுவரத்தின் இந்த புதிய பாம்பன் பாலம், தொழில்நுட்பத்தையும் பாரம்பரித்தையும் ஒன்று சேர்க்கிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒரு பழைமையான நகரமானது, 21-ஆம் நூற்றாண்டின் ஒரு பொறியியல் அற்புதத்தால் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது. பொறியாளர்களின் தீவிரமான உழைப்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.