“என் அப்பாவின் ஆதரவு ஒரே நாளில் கிடைக்கவில்லை” திருநங்கையாக மாறிய கிரிக்கெட் வீரர் மகள் நெகிழ்ச்சி! I anaya bangar gender transition shares story on instagram

Spread the love

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகள் அனயா பங்கர், தனது வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டமாக பாலின மாற்று அறுவை சிகிச்சை (gender affirming surgery) வெற்றிகரமாக தாய்லாந்தில் நிறைவு பெற்றுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்பதிவில், அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் ஓய்வெடுத்து கொண்டிருக்கும் நிலையில், தனது அப்பா அருகில் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

அப்பதிவில், “இந்தப் பயணம் என்னுடைய தனிப்பட்ட மாற்றமாக மட்டுமல்லாமல், எனது குடும்பத்தாருக்கும் உணர்ச்சிமிக்க, சவாலான ஒன்றாக இருந்தது. என்னை உடனடியாகப் புரிந்துகொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. அதற்கு காலம், பொறுமை மற்றும் பரஸ்பர புரிதல் தேவைப்பட்டது. இந்த பயணம் எனக்கு மட்டுமல்லாமல் என் குடும்பத்துக்கும் கடினமான ஒன்றாக இருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *