ரஜினி அவர்கள் மேடைகளில் பேசும்போது சில குட்டிக் கதைகள் கூறுவார். என்னை மிகவும் ஈர்த்த கதை : (தவளை ஒன்று மலை ஏறும்போது எல்லாரும் ஏதேதோ கூறுவர். ஆனால், அந்தத் தவளைக்குக் காது கேட்காது என்பதால், அது யார் சொன்னதையும் கேட்காமல் சென்று மலை ஏறிவிடும்.)
அதுபோல், நம் கனவுப் பயணத்தில் காது கேட்காத தவளையாக மாற வேண்டும் என்ற தெளிவை உணர வைத்தவர் ‘ரஜினி’ அவர்களே..
டீன் ஏஜ் பருவம் அடையும் போது எனது ஐந்து விரல்களோடு ஆறாம் விரலாய் ‘சிகரட்டை’ சேர்க்க முயற்ச்சியில் இருந்த போது ‘ரஜினி’ அவர்கள் பெரும் உடல் சிகிச்சை மேற்க்கொண்டு , எந்த தீய பழக்கத்திலும் அடிமை ஆகாதீங்க’ என்று கூறிய ஒரு வார்த்தையால் என் வாழ்நாள் முழுதும் எந்த தீய பழக்கத்திற்க்கும் அடிமை ஆக கூடாது என்று சபதம் எடுத்தேன்.
என் மனதில் டீன் ஏஜில் ‘மது , சிகரட்’ போல் எதிர் பாலினர் மீதும் வசீகரம் ஏற்படும் இயற்கையாக , ‘பாட்ஷா’ படத்தில், ‘ரஜினி’ அவர்கள் ‘நக்மா’விடம் “பொன்னு, பெண்,புகழ் பின்னாடி நம்ம போக கூடாது அதுதான் நம்மள தேடி வரனும்” என்ற வசனம் தெளிவான வாழ்க்கை முறையை அந்த வசனம் தான் என்னை ஒழுக்காமாக வைத்துள்ளது..
வாழ்வில் நண்பர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் நம்மோடு நெருக்கமான இரத்த உறவுகள் நம்மை விட்டு பிரியும் போது நமக்கு ஏற்படும் வலி மிகவும் கொடியது. “ஆறிலிருந்து அறுபது வரை” படத்தில் “சந்தானம்” என்ற கதாப்பாத்திரம் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது ஒவ்வொரு தம்பிகளாக விலகுவர் ஆனால் ‘சந்தானம்’ கதாப்பாத்திரம் போராடி வெல்லும்.
நம் வாழ்வின் நெருக்கடியான நேரங்களில் யார் விட்டு நம்மை பிரிந்த்தாலும் நமக்கு நமது நம்பிக்கை போதும் என்ற விதையை என் சிறு வயதில் விதைத்தது “ஆறிலிருந்து அருபது வரை” ‘சந்தானம்’ கதாப்பாத்திரம்.

சில நேரங்களில் ‘ரஜினி’ அவர்களின் படத்தில் வரும் காட்சிகளை என் வாழ்க்கையில் விளையாட்டாக பின்பற்றி உள்ளேன் , எனக்கு இயல்பாக சுருட்டை முடி ஆனால் ‘ரஜினி’ அவர்களை போல் தலையை ஆட்டி ஆட்டி முன்னாடி முடியை இழுத்து விட முற்படுவேன் ஆனால் முன்னாடி முடி வரவே வராது எத்தனையோ முடித்திருத்தும் கடைகளில் சென்று “முன்னாடி ‘ரஜினி’ மாறி முடி ஆடனு அண்ணா’’ என்று கூறி வெட்டுவேன் முடி வெட்டி சில நாட்களில் சுருண்டு விடும் . ‘சிவாஜி’ படத்தில் வெள்ளையாக ‘ரஜினி’ அவர்கள் செய்த முயற்சி அனைத்தையும் நானும் செய்துள்ளேன் வேடிக்கையாக..
பல இளைஞர்களின் மனநிலையின் ஒரு சாட்சியாக நான் கூறுகிறேன் என் கனவை தைரியமாக பிறரிடம் சொல்ல , என் தாழ்வு மனப்பான்மையை அகற்ற , தன்னம்பிக்கை மேலோங்க, என் உடல் நிறம் பற்றிய கவலை ஒழிய காரணம் ‘ரஜினி’ அவர்கள்தான் …
என் போல் என் இயாலாமையிலிருந்து வெளிவரக்காரணம் ‘ரஜினி’ அவர்கள்தான், இன்னமும் பல இளைஞர்கள் அவரவரின் இயாலாமையிலிருந்து வெளி வந்து வான் போல் உயர வேண்டும் அவர்களின் முன்னோடி ‘ரஜினியாகா’ இல்லாமல் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்
என் வாழ்வில் இயாலாமையிலிருந்து வெளி வந்த நண்பர்கள் ‘ரஜினி’ இல்லாமல் வேறு ஒருவர் பெயர் கூறினாலும் நான் மகிழ்வேன் ஏனென்றால் ‘சமத்துவம்’ நான் கற்றதும் ‘ரஜினி’ அவர்களால் தான்!