"என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கி இருக்கிறேன்"- தனுஷ்

Spread the love

தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு அவர் பேசுகையில்….

தனுஷ்
தனுஷ்

திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு. தற்போது என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கி இருக்கிறேன்.

பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் தான் நம் வாழ்நாளில் சிறந்த நாட்களாக அமையும்.

மெடிட்டேஷன் மற்றும் மேனிஃபெஸ்டேஷன் இவை இரண்டும் நீங்கள் எட்டத் துடிக்கும் உயரங்களை அடைய உதவும் இதை பின்பற்றுங்கள் ” என்றிருக்கிறார்.

தொடர்ந்து, மீடியா என்பதை தள்ளிவைத்துவிட்டு, உங்களது `பிரீ டைம்’ல்  என்ன செய்வீர்கள் என்று தனுஷிடம் கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு தனுஷ், “நிறைய புத்தகங்கள் படிப்பேன். படங்கள் பார்ப்பேன், இல்லை என்றால் என் மகன்களோடு விளையாடுவேன். இடைவேளையே அபூர்வமாக தான் கிடைக்கும், கிடைத்தால் இது மூன்று தான்” என்று பதிலளித்திருக்கிறார்.

தனுஷ்
தனுஷ்

என்னை நான் ‘workaholic’ என்று சொல்ல முடியாது. குழந்தைகளுக்கு வீடியோ கேம் விளையாடுவது எப்படி பிடிக்குமோ, எனக்கு வேலை செய்வது அந்த மாதிரி. எனவே எனக்கு வேலைக்கு செல்லும் உணர்வே இருக்காது. காலையில் போகும் போதே ஜாலியாக தான் போவேன்.” என்று கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *