என் வாழ்க்கையில் முக்கியமான ஊர் மதுரை: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Dinamani2f2024 08 082f6cr2pwdx2fcm20mdu.jpg
Spread the love

சென்னை: இந்தியாவின் மிக பழமையான நகரமாக திகழும் மதுரை, என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்ற முக்கியமான ஊர் மதுரை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) முகாம் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக, மதுரை நகரத்தின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் “மா மதுரை விழா”-வினை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது, திங்களைப் போற்றுதும்… திங்களைப் போற்றுதும்… ஞாயிறு போற்றுதும்… ஞாயிறு போற்றுதும்… மாமழை போற்றுதும்… மாமழை போற்றுதும் என்று சிலப்பதிகாரம் தீட்டிய இளங்கோவடிகள் எழுதினார்!

இப்போது, “மா மதுரை போற்றுவோம்! மா மதுரை போற்றுவோம்!”- என்று வேள்பாரி தீட்டிய எழுத்தாளர் சு.வெங்கடேசன் எம்.பி நிகழ்ச்சியை நடத்துகிறார். எல்லாருக்கும் அவர் அவர்களின் ஊர் பெருமைக்குரியதுதான்; போற்றுதலுக்குரியதுதான். அதிலும் குறிப்பாக, மதுரை மாநகர் என்பது பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்டது என்று நான் அதிகம் விளக்கத் தேவையில்லை.

• இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று மதுரை.

• இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்டது மதுரை.

• பாண்டிய மன்னர்கள் தலைநகராக ஆட்சி செய்த நகரம்.

• ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன் ஆட்சி செய்த நகரம்.

• “தவறு செய்தவன் மன்னனே ஆனாலும்” மன்னனைக் கண்ணகி கேள்வி கேட்ட மண் இது.

• நீதியைக் காக்க தன்னுடைய உயிரையே தந்த மன்னர் ஆட்சி செய்த இடம் இது.

• திருமலை நாயக்கரும், ராணி மங்கம்மாளும் ஆண்ட பூமி இது.

• புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கும் கோயில் நகரம் இது.

• அனைத்துக் கலைகளும் ஒருங்கே இருக்கும் பண்பாட்டுச் சின்னமாக இந்தக் கோவில் கருதப்படுகிறது.

• புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா, மாபெரும் பண்பாட்டு விழாவாக இது நடைபெற்று வருகிறது.

• 1866-ஆம் ஆண்டே நகராட்சியாக ஆன ஊர் இது.

• சென்னைக்கு அடுத்ததாக இரண்டாவது மாநகராட்சியாக 1971-ஆம் ஆண்டு மதுரையைதான் மாநகராட்சி ஆக்கினார் அன்றைய முதல்வர் கலைஞர்.

• அண்ணல் காந்தி அவர்கள் தன்னை அரையாடை மனிதராக மாற்றிக்கொண்ட இடமும் இந்த மதுரை தான்.

• ஏன் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திமுக இளைஞரணி தொடங்கப்பட்டதும் இந்த மதுரை மண்ணில் இருந்துதான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதனால்தான், பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்ட நகரம் என்று மதுரையை, குறிப்பிட்டேன். இத்தகைய மதுரையை மதுரைக்காரர்கள் மட்டுமல்ல; எல்லோரும் போற்றலாம்; மதுரையைப் போற்றுவோம் என்று கொண்டாடலாம்!

நம்முடைய திராவிட மாடல் அரசில் மதுரை மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்களை வழங்கியிருக்கிறோம். தங்களின் சிறப்பான செயல்பாடுகளால் இரண்டு பேரும் மதுரைக்கும், நம்முடைய அரசுக்கும் பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். 2013-ஆம் ஆண்டு முதல் ‘மா மதுரை போற்றுவோம்’ விழா நடந்துக்கொண்டு இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *