எப்போதும் பா.ஜ.கதவு திறந்திருப்பது ஏன்? சிறிய பிரச்னைக்கெல்லாம் டெல்லிக்கு படையெடுக்கும் ஏக்நாத் ஷிண்டே | Why is the BJP’s door always open? Eknath Shinde invades Delhi for every small issue

Spread the love

இதனால் ஏக்நாத் ஷிண்டே அதிருப்தியடைந்துள்ளார். உடனே மாநில அமைச்சரவை கூட்டத்தை ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா அமைச்சர்கள் புறக்கணித்தனர். அதோடு ஏக்நாத் ஷிண்டே நேரடியாக டெல்லிக்கு சென்று அமித் ஷாவிடம், “என் கட்சித் தலைவர்களை உங்கள் கட்சிக்காரர்கள் பறித்துக்கொண்டார்கள்” என்று புகார் செய்தார். அவரது புகாரை பொறுமையாக கேட்டுக்கொண்ட அமித் ஷா, மாநில அமைச்சரவை கூட்டத்தை சிவசேனா அமைச்சர்கள் புறக்கணித்ததை சுட்டிக்காட்டினார்.

அதோடு மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும், மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்திர சவானும் பா.ஜ.கவின் நலனுக்காகவே எந்தவித நடவடிக்கையும் எடுப்பார்கள் என்று ஏக்நாத் ஷிண்டேயிடம் அமித் ஷா தெளிவாக குறிப்பிட்டார். மேலும் உங்களது தலைவர்களை நீங்கள்தான் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் உங்களது குறைகளை தாராளமாக தன்னிடம் சொல்லலாம் என்றும் அமித் ஷா தெரிவித்தார். இதற்கு முன்பும் பல முறை சிவசேனா அமைச்சர்கள் அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். அப்போதெல்லாம் ஏக்நாத் ஷிண்டே டெல்லிக்கு சென்று பா.ஜ.க மேலிட தலைவர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஏக்நாத் ஷிண்டே, பட்னாவிஸ்

ஏக்நாத் ஷிண்டே, பட்னாவிஸ்

அடிக்கடி டெல்லி செல்வது குறித்து கருத்து தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே, “எந்த பிரச்னையும் இல்லை. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். பீகார் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கவே டெல்லி சென்றேன்”‘என்றார்.

இது குறித்து மாநில பா.ஜ.க மூத்த அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே கூறுகையில்,”கூட்டணி தலைவர்களை சந்தித்து பேசுவதில் தவறில்லை. உல்லாஸ்நகரில் சிவசேனா எங்களது தலைவர்களை இழுத்தார்கள். அதற்கு பதிலடியாகத்தான் சில சம்பவங்கள் நடந்தது. பா.ஜ.க எப்போதும் தனது கூட்டணி கட்சியை மதிக்கிறது. அவர்களின் கவலைகளை சரி செய்யவும் தயாராக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

பா.ஜ.க கதவு திறந்திருப்பது ஏன்?

பா.ஜ.கவிற்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்த சிவசேனாவை 2022ம் ஆண்டு இரண்டாக உடைத்து உத்தவ் தாக்கரேயை செல்லாக்காசாக மாற்ற ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.கவிற்கு உதவி செய்தார். அதோடு சிவசேனாவை ஏக்நாத் ஷிண்டே வசம் கொடுக்கவும் பா.ஜ.க உதவி செய்தது. இப்போதும் மகாராஷ்டிராவில் அடுத்த தேர்தலில் எப்படியும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. அதனால் தான் ஏக்நாத் ஷிண்டே எப்போது டெல்லிக்கு வந்தாலும் அவரை முகம் கோணாமல் வரவேற்று அவரது குறையை பா.ஜ.க தலைவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது வரும் நாட்களில் தொடருமா என்பது சந்தேகம்தான் என்று பா.ஜ.கவினரே தெரிவித்து வருகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *