தொடரை இழந்ததுடன் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் கனவும் தகர்ந்தது. இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக, மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், முன்னாள் வீரர்கள் பலரும் மூத்த வீரர்களை கடுமையாக விமர்சித்தனர்.
மூத்த வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மூத்த வீரர்கள் ஓய்வு முடிவை அறிவித்து, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்தன.