“எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும் வெளியிடாத பல விஷயங்கள் உள்ளன”- மோடியை விமர்சித்த ராகுல்காந்தி | Rahul Gandhi slams modi

Spread the love

எம்.பி-கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயப்படுகிறார் மோடி!

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ராகுல் காந்தி, ” நரவானே, எப்ஸ்டீன் கோப்பு, அமெரிக்க-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நாங்கள் பேசினாலே மோடி பயப்படுகிறார்.

கடந்த சில மாதங்களாக முடங்கிக் கிடந்த (அமெரிக்க-இந்தியா) வர்த்தக ஒப்பந்தத்தில் நரேந்திர மோடி நேற்று இரவு கையெழுத்திட்டார்.

அவர் மீது கடுமையான அழுத்தம் உள்ளது. அதனால் நமது பிரதமர் சமரசத்திற்கு உள்ளாகியிருக்கிறார். அவர் நம் நாட்டை விற்றுவிட்டார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

நரேந்திர மோடி ஜி பயப்படுகிறார், ஏனென்றால் அவருடைய பிம்பத்தை உருவாக்கியவர்களே இப்போது அந்த பிம்பத்தை உடைக்கிறார்கள்.

அதானி ஜி மீது அமெரிக்காவில் ஒரு வழக்கு உள்ளது, அது உண்மையில் மோடி ஜி மீதான வழக்குதான்.

எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும் வெளியிடாத பல விஷயங்கள் உள்ளன. அதன் காரணமாகவும் அழுத்தம் உள்ளது. இதனை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *