எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி மாற்றம்: தலைமை நீதிபதி அறிவிப்பு | Chief Justice announces change of judge hearing cases against MPs and MLAs

1372355
Spread the love

சென்னை: உயர் நீதி​மன்​றத்​தில் எம்​பி, எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரித்து வந்த நீதிபதி பி.வேல்​முரு​கன் மாற்​றப்​பட்​டு, அந்த பொறுப்பு நீதிபதி என்​.சதீஷ்கு​மாரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. இதே​போல், மேலும் சில நீதிப​தி​களின் இலா​காக்​களை​யும் மாற்​றம் செய்து தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​தவா உத்​தர​விட்​டுள்​ளார்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பணிபுரி​யும் நீதிப​தி​களின் வழக்கு விசா​ரணைக்​கான இலா​காக்​கள் 3 மாதங்​களுக்கு ஒரு​முறை மாற்றி அமைக்​கப்​படும். நீதிப​தி​களின் இலா​காக்​கள் வரும் செப்​டம்​பரில் புதி​தாக மாற்​றப்​பட​விருந்த நிலை​யில், ஆக.11 முதல் முன்​கூட்​டியே மாற்​றியமைத்து தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​தவா உத்​தர​விட்​டுள்​ளார்.

அதன்​படி, எம்​பி, எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரித்து வந்த நீதிபதி பி.வேல்​முரு​கன், மேல்​முறை​யீடு மற்​றும் சிவில் மறுஆய்வு வழக்​கு​களை விசா​ரிக்​கும் நீதிப​தியாக மாற்றப்​பட்​டுள்​ளார். எம்​பி, எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்​கு​களை நீதிபதி என்.சதீஷ்கு​மார் விசா​ரிக்​க​வுள்​ளார்.

குற்​ற​வியல் வழக்​கு​கள் மற்​றும் முன்​ஜாமீன் வழக்​கு​களை நீதிபதி ஜி.ஜெயச்​சந்​திரனும், இந்​துசமய அறநிலை​யத்​துறை, திரைப்படம், மின்​வாரி​யம் தொடர்​பான வழக்​கு​களை நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷும், சிபிஐ தொடர்​பான வழக்​கு​களை நீதிபதி எம்.நிர்​மல்​கு​மாரும், குற்​ற​வியல் மேல்​முறை​யீட்டு வழக்​கு​களை நீதிபதி ஜி,கே.இளந்​திரையனும் விசா​ரிக்​க​வுள்​ளனர். இது​மட்டுமினறி, மேலும் பல நீதிப​தி​களின் இலா​காக்​கள்​ மாற்​றியமைக்​கப்​பட்​டுள்​ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *