இந்திய சினிமா வரலாற்றில் ஒருமணி நேரத்தில் அதிகளவில் டிக்கெட்டுகள் விற்பனையான படம் என்ற புகழை எம்புரான் பெற்றது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. மோகன்லால் படத்திலேயே மிக அதிக பட்ஜெட் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதனிடையே, இந்தப் படத்தின் முன்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில், ஒருமணி நேரத்திலேயே 96.14 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று விட்டதாக படத்தின் இயக்குநர் பிருத்விராஜ் தெரிவித்தார்.