புதுதில்லி: எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம், செப்டம்பர் 2024 காலாண்டில், 8 சதவிகிதம் அதிகரித்து ரூ.1,100 கோடியாக உள்ளது.
கடந்த நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,016 கோடியாக இருந்தது என எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனம் பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ரூ.4,115 கோடியாக இருந்த வருவாய், இரண்டாவது காலாண்டில் ரூ.4,263 கோடியாக அதிகரித்துள்ளது. அதே வேளையில் இரண்டாவது காலாண்டில், ராயல் என்ஃபீல்டு 2,25,317 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இது 2024 நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 2,29,496 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ராயல் என்ஃபீல்டு ஐச்சர் மோட்டார்ஸின் ஒரு பிரிவாகும்.
இது குறித்து ராயல் என்ஃபீல்டு தலைமை நிர்வாக அதிகாரியான பி கோவிந்தராஜன் தெரிவித்ததாவது:
இந்தியாவுக்கு வெளியே வங்கதேசம் மற்றும் பிரேசில் எங்கள் தடத்தை விரிவுபடுத்துவதிலும், வலுப்படுத்துவதிலும் நிறுவனம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு ஜனவரி 2025-க்குள் பிரேசிலில் ஒரு புதிய நாக்ட் டவுன் யூனிட்டை அமைக்கும் நோக்கத்தை அறிவித்துள்ளது. இதன் முலம் அதன் செயல்பாடுகளை பன்முகப்படுத்த உதவும்.
எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்றைய மும்பை பங்குச் சந்தையில் 3.15 சதவிகிதம் குறைந்து ரூ.4,589.10 ஆக வர்த்தகமானது.