நாடு முழுவதும் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைகளில்(எய்ம்ஸ்) காலியாகவுள்ள குரூப் பி மற்றும் குருப் சி பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 278/2025
பணி: Assistant Administrative Officer
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 முதல் 31-க்குள் இருக்க வேண்டும்.
பணி: OT Assistant
தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் OT Assistant பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Dietician, Assistant Dietician
தகுதி: Food Science & Nutritian, Home Science, Food and Nutrition பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Pharmacist (Allopathi)
தகுதி: D.Pharm., B.Pharm முடித்து பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Engineer
பிரிவு: Civil, Electrical, Airconditioning, Mechanical
தகுதி: Electrical, Mechanical, Civil போன்ற ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30- க்குள் இருக்க வேண்டும்.
பணி: Optometrist
தகுதி: Optometric Techniques பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: P.A. to Principal
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் 100 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்தில் எழுதி அதனை 40 நிமிடங்களில் ஆங்கிலத்தில் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 30 – க்குள் இருக்க வேண்டும்.
பணி: Multi Tasking Staff
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மருத்துவமனையில் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Lab Technicians
தகுதி: பிளஸ் தேர்ச்சியுடன் Medical Lab Technology பிரிவில் டிப்ளமோ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Cashier
தகுதி: வணிகவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவம் மற்றும் Computer Application-இல் நல்ல សំល திறமை பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 முதல் 30-க்குள்இருக்க வேண்டும்.
பணி: Hospital Attendant
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மருத்துவமனையில் Attender ஆக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Dental Mechanic
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Dental Mechanic பாடத்தில் டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Medical Record Technician
தகுதி: Medical Records பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் அறிவுத்திறன் பெற்றவராகவும், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள், ஹிந்தியில் 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Stenographer
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் 10 நிமிடம் எழுதி, அதை 50 நிமிடத்தில் ஆங்கிலத்தில் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Upper Division Clerk
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், ஹிந்தி வார்க்கைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
உச்சவயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.
சம்பளம்: மேற்கண்ட அனைத்துப் பணிகளுக்கும் ஏழாவது ஊதியக் குழு விதிமுறைப்படி சம்பளம் அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ. 3000, பெண்கள், இதர பிரிவினர்களுக்கு ரூ.2,400. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.aiimsexams.ac.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.7.2025
ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நடைபெறும் . தேர்வு நடைபெறும் சரியான நாள், இடம் குறித்த விபரங்கள் மின்அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் AIIMS, JIPMER, RIMS போன்ற மத்திய அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்படுவர்.