முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பார்ப்பதற்காக காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தில்லி நகரின் பல இடங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவும் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
மன்மோகன் சிங் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் இருந்து விரைவில் அறிக்கை வெளியிடப்படவுள்ளது.