புதுதில்லி: எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், அதன் நிகர லாபம் 2 சதவிகிதம் சரிவடைந்து ரூ.1,300 கோடியாக குறைந்துள்ளது.
எல்.ஐ.சி-யால் ஊக்குவிக்கப்பட்ட ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.1,324 கோடி லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.6,747 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.6,784 கோடியானது என்று எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் தனது ஒழுங்குமுறை தாக்கல் ஒன்றில் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் வட்டி வருமானம் முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.6,703 கோடியிலிருந்து ரூ.6,739 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த செலவினம் ரூ.5,098 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.5,155 கோடியாக உள்ளது.