பிரபல மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவின் மூத்த நடிகையான கவியூர் பொன்னம்மா உடல் நலக்குறைவால் கேரளத்தில் நேற்று முன்தினம் (செப். 20) காலமானார்.
இவரது மறைவுக்கு மலையாளத் திரையுலகினர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

விநாயகனுக்கு வில்லனாகும் மம்மூட்டி!
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் இரங்கல் குறிப்பை பகிர்ந்துள்ளார்.
அதில், ‘எல்லா நடிகர்களுக்கும் அம்மா’ என்று செல்லப் பெயரெடுத்தவர் மலையாளத் திரையின் சிறந்த குணச்சித்திர நடிப்புக் கலைஞரான கவியூர் பொன்னம்மா. அவரது நடிப்புத் திறத்தால் அவரைத் தமிழ்த் திரைக்கும் (சத்யா) அழைத்து வந்தோம்.
'எல்லா நடிகர்களுக்கும் அம்மா' என்று செல்லப் பெயரெடுத்தவர் மலையாளத் திரையின் சிறந்த குணச்சித்திர நடிப்புக் கலைஞரான கவியூர் பொன்னம்மா. அவரது நடிப்புத் திறத்தால் அவரைத் தமிழ்த் திரைக்கும் (சத்யா) அழைத்து வந்தோம்.
தன் 13 ஆம் வயதில் மேடை நாடகக் கதாநாயகியாக அறிமுகமானவரின் கலைப் பயணம்,… pic.twitter.com/wU0tLuLNSn
— Kamal Haasan (@ikamalhaasan) September 22, 2024
தன் 13 ஆம் வயதில் மேடை நாடகக் கதாநாயகியாக அறிமுகமானவரின் கலைப் பயணம், சினிமா, சீரியல், விளம்பரங்கள் என்று தொடர்ந்தது.
‘அம்மா’ கவியூர் பொன்னம்மா இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்துகிறது. அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவிக்கிறேன். அன்னாருக்கென் அஞ்சலி.