“எல்லா லேடீசும்  ஹாப்பி அண்ணாச்சி” தொடர்ந்து சரியும் தங்கம் விலை, சவரனுக்கு ரூ.640 குறைவு – Kumudam

Spread the love

சர்வதேச சந்தையில் டாலர் குறியீட்டின் வலுவே தங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக தங்கம் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர் மாறாக நாள்தோறும் தங்கம் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. வெள்ளி விலையும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. 

நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.450 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ 60 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,650-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று வெள்ளியும் கிராமுக்கு ரூ.4 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.280 விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ.4 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று வெள்ளியும் கிராமுக்கு ரூ. 5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *