எல்லை தாண்டிய தாக்குதலால் அதிரும் ஆப்கானிஸ்தான்: பாகிஸ்தான் தூதருக்கு தாலிபான் அரசு சம்மன்! |Conflict erupts between Pakistan and Afghanistan: Airstrikes heighten tensions on the border

Spread the love

பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை மறுத்த தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், “பாகிஸ்தானின் இந்தத் தாக்குதல்கள் மதரஸாக்கள் மற்றும் குடியிருப்புகள் போன்ற பொதுமக்கள் வாழும் பகுதிகளிலேயே நடத்தப்பட்டன. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 18-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் வான்வெளி வரம்பையும், இறையாண்மையையும் மீறியுள்ளது. இதற்குப் பாகிஸ்தானே பொறுப்பேற்க வேண்டும். 70 போராளிகள் கொல்லப்பட்டனர் என்ற பாகிஸ்தானின் தகவல் முற்றிலும் பொய்யானது” எனக் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து, காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரை ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து, தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது. தங்கள் நாட்டைப் பாதுகாப்பது தங்களின் சட்டக் கடமை என்றும் ஆப்கானிஸ்தான் எச்சரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான்ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்

ஆப்கானிஸ்தான்ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்

தாக்குதல் நடந்த பகுதிகளில் கிராம மக்கள் இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். தாக்குதல் நடந்தப் பகுதியில் வசிக்கும் உள்ளூர் பழங்குடியினத் தலைவர் ஹபீபுல்லா, “ உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. கொல்லப்பட்டவர்கள் தாலிபான்களோ அல்லது ராணுவ வீரர்களோ அல்ல, அவர்கள் ஏழை கிராமவாசிகள்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாகிஸ்தானின், பாதுகாப்பு ஆய்வாளர் அப்துல்லா கான், “பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களைத் தீர்க்க கத்தார், துருக்கி மற்றும் சவுதி தலைமையிலான மத்தியஸ்தங்கள் கூடத் தவறிவிட்டன என்பதை பாகிஸ்தான் தாக்குதல்கள் காட்டுகின்றன. இந்தத் தாக்குதல்கள் சூழலை மேலும் மேலும் மோசமாக்க வாய்ப்புள்ளது,” என்று அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் ஏற்கனவே இருநாடுகளுக்கும் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் மேலும் போர்ப் பதற்றம் உருவாகியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *