இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடித்த வங்கதேசத்தை சேர்ந்த மீனவர்கள் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீன் பிடிக்க அவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளையும் இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள் சிறை பிடித்துள்ளனர். கைதான மீனவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. அவர்கள் அனைவரும் சிட்டகாங் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்திய கடல் பகுடியில் அத்துமீறி மீன் பிடித்ததால் இந்திய கடலோரக் காவல்படை அவர்களை படகுகளுடன் சிறை பிடித்துள்ளது. அவர்களிடமிருந்த மீன் உள்பட சுமார் 160 டன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிறைபிடிக்கப்பட்ட படகுகள் இரண்டும் விசாரணைக்காக பாரதீப் துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அண்டை நாட்டு மீனவர்கள் இந்திய கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதை தடுக்க ஒடிஸா மாநிலத்தையொட்டிய கடல் பகுதியில் சுமார் 484 கி.மீ. தொலைவுக்கு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளடு குறிப்பிடத்தக்கது.