2023-24-ஆம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் 17 சதவீதம் அதிகரித்து ரூ.696 கோடியாக உள்ளது. அதே போல், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த கடனளிப்பு கடந்த நிதியாண்டின் அதே காலகட்டத்தைவிட 28 சதவீதமும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டைவிட (ஏப்ரல்-ஜூன்) 18 சதவீதமும் அதிகரித்து ரூ.88,975 கோடியாக உள்ளது.