மக்களின் தேவை, பயம் – இது தான் மோசடிகளின் அடித்தளம்.
இந்த மோசடிகள் காலத்திற்கேற்ப தொடர்ந்து அப்டேட் ஆகிக்கொண்டே வருகின்றன.
இதற்கான சமீபத்திய உதாரணம் – எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் மோசடி.
ஈரான் போரினால் இந்தியாவிற்கு எரிசக்தி சப்ளை தடைப்பட்டுள்ளது. இதனால், இங்கே எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அரசும் அதன் விநியோகத்தில் பல கெடுபிடிகளை விதித்துள்ளது.
“ஒருவேளை கேஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்ய…’ என்கிற பயத்திலேயே மக்கள், கேஸ் சிலிண்டர் கிடைக்கிறது என்றாலே அங்கே ஆஜராகி விடுகின்றனர்.
மெசேஜ்…
இதை பயன்படுத்தி தான், இப்போது புது மோசடி அரங்கேறி வருகிறது.
‘உங்கள் எல்.பி.ஜியில் KYC அப்டேட் செய்யப்படவில்லை. குறைந்த ஸ்டாக்கே உள்ளது. உடனே அப்டேட் செய்து ஆர்டர் செய்யுங்கள்…’
‘இன்னும் உங்களது எல்.பி.ஜியை நீங்கள் ஆதாருடன் இணைக்கவில்லை… உடனே அப்டேட் செய்யுங்கள்…’
‘எல்.பி.ஜி கனெக்ஷனைத் தொடர உடனே பேமென்ட் செய்யுங்கள். இல்லையென்றால் உங்கள் கனெக்ஷன் உடனடியாக ரத்து செய்யப்படும்…’
இப்படி லிங்குகளுடன் விதவிதமான எல்.பி.ஜி கனெக்ஷன் மெசேஜ்கள் வருகின்றன.