சுஜாதா திரைக்கதையில் ஷங்கரின் ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன் சிவாஜி ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.
கடைசியாக எந்திரன் படத்திலும் சிஜாதா பணியாற்றினார். ஆனால் படம் வெளியாகவதற்கு முன்பே இறந்துவிட்டார். அதற்கடுத்து ஷங்கரின் படங்கள் பெரிதாக கதைக்காக பாராட்டு வாங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் கழித்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதன் புரோமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஆங்கில ஊடகத்தின் நேர்காணலில் ஒன்றில் எழுத்தாளர் சுஜாதா குறித்து கேட்கப்பட்டபோது ஷங்கர் பேசியதாவது:
ஆமாம், சுஜாதா எனக்கு தந்தை மாதிரி; அவர் என்னை தனது மகன்போல நடத்துவார். அவரை எப்பொழுதும் மிஸ் செய்கிறேன்.
பெண்கள் கதாபாத்திரம் வலுவாக இருக்கும். படத்தில் அவர்களின் குரலை உயர்த்துவார்கள். காஜலின் கதாபாத்திரம் இந்தியன் 3 படத்திலும் வரும். ஆரம்பத்தில் இந்தியன் 3 திட்டமிடவில்லை. 2.5 மணி நேரத்தில் இந்தப் படத்துக்கான நியாயத்தை செய்ய முடியாது. அதனால்தான் இந்தியன் 3.
படம் பார்த்து மக்கள் ஒரே இரவில் திருந்தமாட்டார்கள். ஆனால் அதன் தாக்கம் இருக்கும் எனக் கூறியுள்ளார்.