திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் தேர்தல் பிரச்சார பயணக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
வத்தலக்குண்டு அருகேயுள்ள ப.விராலிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக, அதிமுக தலைமையிலான கூட்டணி பலம் பெறுவது கண்டு ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோருக்கு தோல்வி பயம் வந்து விட்டது.
சிஐஏ பிரச்சினை, நாடாளுமன்றத் தொகுதி குறைக்கப்படும் பிரச்சினைகளைத் தொடர்ந்து தற்போது சிறப்பு வாக்காளர் திருத்தம் (எஸ்ஐஆர்) நடவடிக்கையை திமுக மடைமாற்றும் செய்கிறது. வரும் ஜனவரி மாதம் அதிமுக, பாஜக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரும். இவ்வாறு அவர் கூறினார்.
 
		 
		 
		