எஸ்ஐஆர் பணிகளை பார்வையிட சிறப்பு குழு: பாஜக வலியுறுத்தல்  | Special team to inspect SIR works: BJP

Spread the love

சென்னை: தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வெளியிட்ட சமூக வலை​தளப் பதி​வு: தமிழகத்​தில் குழப்​பத்தை ஏற்​படுத்​தி, எஸ்​ஐஆர்

பணி​களைமுடக்க திமுக அரசு முயற்சிப்பதாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​களாக திமுக தொண்​டர்​களும், திமுக​வுக்கு விசு​வாச​மாக இருப்​பவர்​களும் நியமிக்​கப்​படு​வ​தால் இந்த பணிநேர்​மை​யாக நடக்​குமா என்ற சந்​தேக​மும் எழுகிறது.

போலி வாக்​காளர்​களைக்காப்​பாற்ற திமுக முயற்​சிக்​கிறது.இதனால் தங்கள் வாக்குரிமை பறிக்​கப்​பட்டு விடுமோ என்ற அச்​சத்​தில் மக்​கள், வாக்குச்சாவடி அலுவலர்களை முற்​றுகை​யிட தொடங்​கி​யுள்​ளனர். எனவே, திருத்​தப் பணி​யைப் பார்​வை​யிட சிறப்​புக் குழுவை நியமிக்க வேண்​டும்.அரசு அதி​காரி​களை​யும், நடுநிலை​யானவர்​களை​யும் பணி​யில் அமர்த்த வேண்​டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *