புது தில்லி : எஸ்டிபிஐ தேசியத் தலைவர் எம். கே. ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஃபைஸியை தில்லி சர்வதேச விமான நிலையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை(மார்ச் 4) பி.எம். எல்.ஏ. சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.