எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு குற்றச்சாட்டு: அனில் அம்பானி தரப்பு நிராகரிப்பு!

Spread the love

அனில் அம்பானியால் பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ. 2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டதாக அளிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அனில் அம்பானி தரப்பு நிராகரித்துள்ளது.

இதனிடையே, எஸ்பிஐ புகாரின்பேரில், சிபிஐ அதிகாரிகளால் இன்று(ஆக. 23) அனில் அம்பானி இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடைபெற்றது.

வங்கி முறைகேடு தொடர்பாக எஸ்பிஐ தரப்பிடமிருந்து அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து. கடந்த வியாழக்கிழமை அனில் அம்பானி மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேசன் லிமிடட்.(ஆர்காம்) நிறுவனத்தின் இயக்குநர் அனில் அம்பானியின் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் குழுக்கள் சோதனை நடத்தின.

இந்த நிலையில், இது குறித்து அனில் அம்பானி தரப்பிலிருந்து செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலான விவகாரத்தில் பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) புகார் அளித்துள்ளது.

அந்தக் காலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் நிர்வாகம் அல்லாத பிரிவுகளின் இயக்குநராக அனில் அம்பானி இருந்தவர். அப்படியிருக்கையில், அனில் அம்பானி மீது தனிப்பட்ட முறையில் குறிவைத்து எஸ்பிஐயால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேற்கண்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

SBI’s declaration challenged in judicial forum, Anil Ambani denies all allegations.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *