எஸ்பிஐ வங்கியில் மேலாளர் பணி: 26-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

Dinamani2fimport2f20222f92f182foriginal2fsbir.jpg
Spread the love

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள மேலாளர்(ரீட்டேல் திட்டங்கள்) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Manager (Retail Products)

காலியிடங்கள்: 3+1

தகுதி: எம்பிஏ, மேலாண்மை பிரிவில் முதுகலை டிப்ளமோ, மேலாண்மை பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் தயாரிப்பு மேம்பாடு, தயாரிப்பு மேலாண்மை, டிஜிட்டல் புதுமை, வணிக உத்தி, சந்தைப்படுத்துதலில் திறன், சிறந்த தகவல் தொடர்பு மற்றும் தலைமைத்துவத் திறன் உடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.85,920 – 1,05,280

வயதுவரம்பு: 31.12.2024 தேதியின்படி 28 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் https://bank.sbi/web/careers/current-openings என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.3.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *