தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம்தேர்ச்சி பெற்றனர்.94.56 சதவிகிதம் தேர்ச்சி சதவீதம் ஆகும்.
10-ந்தேதி வெளியாகிறது
இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10-ந்தேதி) காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளன.
இணையதள முகவரி
சென்னை டிபிஐ வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது.
மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதிவை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.
செல்போன் எண்ணிற்கு
மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடும் போதே அவர்கள் தேர்விற்கான விண்ணப்பத்தில் அளித்த செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.