எஸ்.ஐ.ஆர் திருத்தம்: தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் மம்தா!|Mamata Files Article 32 Plea on Voter List Revision in Bengal

Spread the love

தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கடுமையாக எதிர்க்கும் முக்கிய மாநிலங்களில் ஒன்று – மேற்கு வங்கம்.

இந்தத் திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

> மம்தாவின் மனு அரசியல் சாசனம் பிரிவு 32-ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு அடிப்படை உரிமைகளை அமல்படுத்துவதற்கான உச்ச நீதிமன்றத்தின் உரிமையைக் குறிப்பிடுகிறது.

> இந்த ஆண்டு நடக்க உள்ள மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் ஏற்கெனவே இருக்கும் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தான் நடக்க வேண்டும். எஸ்.ஐ.ஆர் பட்டியலின் அடிப்படையில் தேர்தல் நடக்க கூடாது.

> எஸ்.ஐ.ஆர் நடைமுறையின் போது, வாக்காளர் அட்டையில் உள்ள சின்னச் சின்ன எழுத்துப் பிழைகளுக்கு எல்லாம் தேர்தல் ஆணையம் வழக்கு தொடுக்கக்கூடாது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *