நீங்களும் வேலைக்குப் போறீங்க. உங்க மனைவியும் (அல்லது கணவரும்) வேலைக்குப் போறாங்க. ரெண்டு பேருக்கும் மாசம் நல்ல சம்பளம் வருது. ஆனா, மாசக்கடைசியில அக்கவுண்ட் பேலன்ஸ பார்த்தா மட்டும், யாரோ நம்மளை வெச்சு காமெடி பண்ற மாதிரியே ஒரு ஃபீல் வருதா?
ஒருநாள் நைட், சாப்பிட்டு முடிச்சுட்டு பெட்ல படுக்கும்போது, உங்க பார்ட்னர் மெதுவா கேட்பாங்க… “ஏங்க, ரெண்டு பேரும் இவ்ளோ கஷ்டப்பட்டு வேலைக்குப் போறோமே, எப்படியாவது நாம ஒரு ‘கோடீஸ்வரன்’ ஆயிட மாட்டோமா? எங்க சித்தப்பா பையன் கூட நேத்து 2 கோடிக்கு வீடு வாங்கிருக்கான்… நாம எப்ப வாங்குறது?”
அப்போ உங்க மைண்ட் வாய்ஸ் சொல்லும்: “இங்க அடுத்த மாசம் EMI கட்டவே அக்கவுண்ட்ல ஒண்ணுமில்ல, இதுல 2 கோடிக்கு வீடு வேற கேட்குதா?” ஆனா, வெளில சிரிச்சுக்கிட்டே, “அதெல்லாம் வாங்கிடலாம்மா… சீக்கிரமே ஒரு பெரிய மேஜிக் நடக்கும்”னு சொல்லி சமாளிப்பீங்க.

உண்மையிலேயே அந்த மேஜிக் நடக்கணுமா?
கொஞ்சம் கற்பனை செஞ்சு பாருங்க… நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து உழைக்கிற பணம், உங்களுக்குத் தெரியாமலே பின்னணியில சைலண்டா வேலை செஞ்சு, ஒரு 5 அல்லது 10 வருஷத்துல உங்க அக்கவுண்ட்ல பல கோடிகளா வளர்ந்து நிக்குது.
“பாஸ், எனக்கு லீவு வேணும், இல்லனா ரிசைன் பண்றேன்”னு கெத்தா சொல்லிட்டு, எந்த இஎம்ஐ டென்ஷனும் இல்லாம, உங்க ஃபேமிலியோட வெளிநாட்டுக்கு ட்ரிப் போறீங்க. உங்க பிரண்ட்ஸ்லாம் உங்களைப் பார்த்து, “மச்சான், எப்படிடா இப்படி செட்டில் ஆன?”னு ஆச்சரியமா கேக்குறாங்க.
எப்படி இருக்கு இந்த லைஃப்? இது வெறும் சினிமா கதை இல்ல, நிஜத்துல சாத்தியம்தான்! ஆனா, அதுக்கு நீங்க பண்ண வேண்டிய முதல் வேலை – அந்தப் பழைய “பிக்ஸட் டெபாசிட்’ மற்றும் ‘போஸ்ட் ஆஃபீஸ்’ மைண்ட்செட்டிலிருந்து வெளியே வரணும்.
கணவனும் மனைவியும் சேர்ந்து எப்படிச் சீக்கிரம் பணக்காரர்கள் ஆவது?
இருவரும் இணைந்து திட்டமிடுங்கள் (Joint Financial Goals): உங்கள் இருவரின் சம்பளத்தையும் தனித்தனியாகச் செலவு செய்யாமல், உங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு ‘Financial Goal’-ஐ உருவாக்குங்கள்.