ஏசியன் பெயிண்ட்ஸ் முதல் காலாண்டு லாபம் 6% சரிவு!

dinamani2Fimport2F20212F52F162Foriginal2Fasian080741
Spread the love

புதுதில்லி: ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 5.87 சதவிகிதம் குறைந்து ரூ.1,117.05 கோடியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அலங்கார பெயிண்டிற்கான தேவை குறைந்ததே இதற்குக் முக்கிய காரணம்.

நிதியாண்டு 2026 ஜூன் வரையான காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 5.87 சதவிகிதம் சரிந்து ரூ.1,117.05 கோடியாக உள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் நிறுவனம் ரூ.1,186.79 கோடி நிகர லாபம் ஈட்டியது. அதே வேளையில் ஜூன் வரையான காலாண்டில் விற்பனையிலிருந்து அதன் வருவாய் ரூ.8,924.49 கோடியாக குறைந்தது. இதுவே அதன் முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ.8,943.24 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் மொத்த செலவுகள் ஜூன் வரையான காலாண்டில் ரூ.7,658.95 கோடியாக இருந்தது. இதுவே அதன் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 1.32 சதவிகிதம் அதிகம்.

இருப்பினும், ஜூன் வரையான காலாண்டில் அதன் மொத்த வருமானம் மற்றும் பிற ஆதாரங்களில் வழியாக வரும் வருவாயை சேர்த்து ரூ.9,131.34 கோடியாக இருந்தது.

உள்நாட்டு வருவாய் உள்பட, தனித்த அடிப்படையில், ஏசியன் பெயிண்ட்ஸ் விற்பனையிலிருந்து கிடைத்த வருவாய் 1.19 சதவிகிதம் குறைந்து ரூ.7,848.83 கோடியாக இருந்தது.

ஏசிசின் பெயிண்ட்ஸ் டெகரேட்டிவ் வணிகம் 3.9 சதவிகித அளவு வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், அதன் வருவாய் 1.2 சதவிகித சரிவைக் கண்டது. நிறுவனம் அதன் வருவாயில் பெரும்பகுதியை, 80 சதவிகிதத்திற்கும் மேலாக, அதன் அலங்கார மற்றும் வீட்டு அலங்கார வணிகப் பிரிவிலிருந்து ஈட்டுகிறது.

சர்வதேச வணிகத்தின் விற்பனை 8.4 சதவிகிதம் அதிகரித்து ரூ.679.1 கோடியிலிருந்து ரூ.736.1 கோடியாக உயர்ந்தது. இது ஆசிய சந்தைகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் பின்னணியாகும்.

ஜூன் மாதத்தில் பருவமழை குறைத்த போதிலும், நகர்ப்புற மையங்களிலிருந்து தேவையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதால், இந்த காலாண்டில் பெயிண்ட் துறை சிறிது வளர்ச்சியைச் சந்தித்ததாக நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அமித் சிங்கில் தெரிவித்தார்.

இதையும் படிக்க: 2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசியா

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *