“ஏன் இந்த மாதிரி அநியாயம் பண்றாங்கனு எனக்கு புரியல!” – குழந்தை நட்சத்திரம் அஸ்வத் |”I don’t understand why they are doing such an injustice!” – Child actor Aswath

Spread the love

குழந்தை நட்சத்திரம் அஸ்வத், “தமிழக அரசின் மாநில விருதுகள் அறிவிச்சிருக்காங்க. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுக்கு என்னை அறிவிப்பாங்கனு நெனைச்சிருந்தேன்.

ஆனா, அதுல என்னுடைய பெயர் இல்ல. 2019-ல் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ராசு குட்டியாக நான் நடிச்சிருந்தேன். அந்தப் படத்துக்காக எனக்கு விருது கொடுப்பாங்கனு நினைச்சேன்.

ஆனால், விருது எனக்கு கிடைக்கல. பிறகு, 2022-ல் வெளியான ‘மை டியர் பூதம்’ படத்துக்காக விருது கொடுப்பாங்கனு எதிர்பார்த்தேன். அந்தப் படத்துக்கு எனக்கு அறிவிக்கல.

ஜூரி மெம்பர்ஸ் இந்த மாதிரியான படங்களைப் பார்க்கிறாங்களா, இல்லையானே தெரியல!? ஒரு நடிகர் நடிக்கிறார்னா, அவருக்கு அங்கீகாரம் கிடைக்கணும்.

அவருக்கு அங்கீகாரமே கிடைக்கலைனா, அவர் நடிக்கிறதே வேஸ்ட்ல. ஏன் இந்த மாதிரி அநியாயம் பண்றாங்கனு எனக்கு புரியல.

மக்கள் நீங்க அந்த ரெண்டு படத்தைப் பாருங்க, அந்த வயசுல அந்த நடிப்புக்கு மேல வேற என்ன வேணும்னு நீங்க சொல்லுங்க!” என வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *