இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை கஜோல், மராத்தியிலும் ஆங்கிலத்திலும் பதிலளித்து வந்தார். அப்போது, செய்தியாளர், ‘ஹிந்தியில் பேசுங்கள்’ என்றார்.
அதற்கு கஜோல், “ஏன் ஹிந்தியில் பேச வேண்டும்? புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் போதும்” எனக் கோவமாகப் பதிலளித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளுக்கு இடையே நிகழும் சர்ச்சையால் கஜோலின் இப்பதில் காரசார விவாதமாக மாறியுள்ளது.
முக்கியமாக, ஹிந்தியில் பேச முடியாவிட்டால் நீங்கள் ஏன் ஹிந்தித் திரைப்படங்களில் நடிக்கிறீர்கள் எனப் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.