ஏப்ரல் 6-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கொளத்தூரில் வேட்புமனு தாக்கல் – Kumudam

Spread the love

தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட வரும் 30-ம் தேதி முதல் வேட்புமனுதாக்கல் தொடங்க உள்ளது. இதற்காக வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

இந்த நிலையில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். அந்த தொகுதியில் ஏப்ரல் 6-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.இதற்கு முன்னதாக ஏப்ரல் 2-ம் தேதி திருவாரூரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை ஸ்டாலின் தொடங்க உள்ளார். 

ஏப்ரல் 3ம் தேதி காலை ஜெயங்கொண்டம் பொதுக்கூட்டம் நடத்துகிறார். திருவெறும்பூரில் மாலை பொதுக்கூட்டம் மற்றும் திருச்சி மாநகராட்சியில் ரோடு ஷோ நடத்துகிறார். ஏப்ரல் 4ம் தேதி காலை கரூரில் பொதுக்கூட்டம், மாலை திருப்பூரில் பொதுக்கூட்டம் நடத்துகிறார். ஏப்ரல் 5ம் தேதி காலை நாகர்கோவில் மாலை திருநெல்வேலியில்பொதுக்கூட்டம் நடத்துகிறார்.

ஏப்ரல் 6ம் தேதி காலை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். மாலை திருவள்ளூரில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். ஏப்ரல் 7ம் தேதி காலை மேட்டுப்பாளையத்தில் பொதுக்கூட்டமும் மாலை சூலூரில் பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ நடத்துகிறார்.

ஏப்ரல் 8ம் தேதி பரமத்தி வேலூர், ஈரோடு மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடத்துகிறார். 9ம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரியில் பொதுக்கூட்டம், 10ம் தேதி வேலூர் மற்றும் ஆரணி மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடத்துகிறார். 11ம் தேதி சிவகங்கையில் பொதுக்கூட்டம் நடைபெறும். 21ம் தேதி ஸ்ரீ பெரும்புத்தூர் தொகுதியில் பொதுக்கூட்டம் மாலை கொளத்தூரில் பிரசாத்தை ஸ்டாலின் நிறைவு செய்ய உள்ளார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *