இதையடுத்து அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு,
‘தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடைபெறும்.
நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நாளை மட்டும் கேள்வி நேரம் இல்லை.
வரும் மார்ச் 17 (திங்கள்கிழமை) முதல் 5 நாள்களுக்கு பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடைபெறும்.
தொடர்ந்து மார்ச் 24 முதல் ஏப்ரல் 30 வரை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்’ என்று கூறினார்.