2001 முதல் 2014 வரை தமிழக அரசியல் அதிமுக – திமுக ஆட்சி மாற்றங்களால் நிரம்பியது. ஊழல் வழக்கின் அதிர்வுகள், திமுகவில் ஸ்டாலின் தலைமையின் எழுச்சி, ஜெயலலிதாவின் இரண்டாவது ஆட்சி, மத்திய அரசில் மாற்றங்கள், இதன் நடுவே மக்கள் அடிக்கடி ரஜினியை ஒரு “மாற்றத் தலைவர்” என எதிர்பார்த்தனர்.
குறிப்பாக 2010 பிறகான காலத்தில் ஊழலுக்கு எதிரான கோபம் அதிகரித்தபோது, அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற புதிய அரசியல் மாதிரி தெற்கிலும் தோன்றுமா என்ற யோசனை மக்களிடையே எழுந்தது. ரஜினி அந்த தருணத்தில் களத்திற்கு வந்திருந்தால், மாற்ற அரசியலின் புதிய வடிவம் உருவாகியிருக்கலாம்.
2016, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட அதிகார வெற்றிடம் தமிழக அரசியலை மேலும் குழப்பத்தில் தள்ளியது. அதிமுகவில் தலைமை மோதல், திமுகவில் ஸ்டாலின் தலைமையின் உறுதி, மக்கள் மனதில் இருந்த இந்த சூழலில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை மிக உயர்ந்தது. அவர் வந்திருந்தால் அரசியல் களம் முற்றிலும் மாறியிருக்கலாம். அவரைச் சுற்றி உருவான எதிர்பார்ப்பு, பொதுமக்களின் மாற்ற ஏக்கம், மக்கள் உணர்வாக மாறியது.
ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவதால் எல்லாம் எளிதாகிவிடும் என நினைப்பது தவறு. அவரது உடல்நல பிரச்சனைகள், தொடர்ச்சியான மருத்துவ கவலைகள், அரசியலில் தேவைப்படும் தினசரி நிர்வாக திறன். அரசியலில் இருப்பது திரைபட நாயகனின் புகழால் தீர்க்கப்பட முடியாத ஒன்று.
கட்சியின் தலைமை பணி, மாவட்ட நிர்வாகம், எதிர்க்கட்சிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் மன வலிமை, ஒழுங்கு படைத்த தலைமை இவை அனைத்தும் கண்டிப்பாக வேண்டும். ரஜினி களம் இறங்கியிருந்தால், அவரைச் சுற்றிய தாக்குதல்களும், எதிர்ப்புகளும், விமர்சனங்களும் மற்ற நடிகர்களை விட அதிகமாக இருந்திருக்கும். ஏனெனில் அவரிடம் இருந்த மக்கள் நம்பிக்கை அவரை பலருக்குப் “அபாயகரமான எதிரி”யாக மாற்றியிருக்கும்.