ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது.
ஜெய்ப்பூர் விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியாவின் ஏஐ612 விமானம் இன்று(ஜூலை 25) பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு வானில் பறக்க தொடங்கியபோது, அதில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து விமானம் உடனடியாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டு அங்கு சோதனை செய்யப்பட்டதில், விமானத்தில் கோளாறு எதுவும் இல்லை என்பதையும், பறப்பதற்கு தயாராக இருப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர். அதன்பின், ஏர் இந்தியா விமானம் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.