ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் உயர்வு!

Dinamani2fimport2f20202f32f272foriginal2fsensex 960x540084347.jpg
Spread the love

புத்தாண்டின் இரண்டாம் நாளான இன்றும்(ஜன. 2) பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
78,657.52 என்ற புள்ளிகளில் தொடங்கியது. பிற்பகல் 1 மணிக்கு மேல் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது.

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 1,436.30 புள்ளிகள் உயர்ந்து 79,943.71 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 445.75 புள்ளிகள் உயர்ந்து 24,188.65 புள்ளிகளில் முடிந்தது.

இதையும் படிக்க | சாப்பிட்டவுடன் டீ/காஃபி குடிக்கலாமா? – ஐசிஎம்ஆர் கூறுவது என்ன?

ஐடி, ஆட்டோமொபைல் என பெரும்பாலாக அனைத்துத் துறைகளும் இன்று ஏற்றம் கண்டன.

பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், கோடக் மஹிந்திரா வங்கி, இன்ஃபோசிஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா, மஹிந்திரா & மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவை ஆகியவை அதிகம் லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.

பஜாஜ் ஃபின்சர்வ், ஈச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுஸுகி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டின.

சன் பார்மா, அதானி போர்ட்ஸ், என்டிபிசி, எஸ்பிஐ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா குறைந்து 85.75 ஆக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *