இப்போது அந்த எண்ணிக்கை இன்னும் கூடியிருக்கும், இப்படிப்பட்ட அரசை, ஆன்மீகத்துக்கு எதிரி என்று சொன்னால், அப்படி சொல்லக் கூடியவர்களுடைய உள்நோக்கம் என்ன என்று, உண்மையான பக்தர்களுக்கு தெளிவாக தெரியும். அறத்தைக் கொண்டாடும் அமைதியான மாநிலமாகதான் தமிழ்நாடு என்றைக்கும் இருக்கும்.
மதுரை மக்களிடம் வளர்ச்சி என்று சொன்னால், வாங்க, வாங்க, என்று வரவேற்பார்கள். அதுவே வன்முறையை தூண்ட கூப்பிட்டால், மதுரை ஸ்லாங்கில் சொல்ல வேண்டுமென்றால், கலவரக் கும்பலை பொடனிலேயே அடிச்சு வெரட்டுவாய்ங்க.

அமைதியின் பக்கம் நிற்கின்ற, மதுரை மக்களுக்கு என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய எதிரிகள், டெல்லியில் இருந்து நமக்கு எத்தனை இடைஞ்சல்கள் கொடுத்தாலும், நிதி நெருக்கடிகள் ஏற்படுத்தினாலும், ஆளுநர் மூலமாக, முட்டுக்கட்டைகள் போட்டாலும், எல்லாவற்றையும் மீறி, இந்தியாவிலேயே நம்பர் ஒன்னாக வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்திருக்கிறது.
எங்களுடைய வளர்ச்சிப் பயணத்தை, உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் சதித்திட்டங்கள் எல்லாம் செய்கிறீர்கள். நீங்கள் எப்படி பந்து வீசினாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் அது அடிப்பது சிக்சர்தான். அந்த டீமுக்கு ஏற்றார்போல அடிமைகள் சிக்கலாம். பழைய அடிமைகள், புது அடிமைகளை வைத்து, ‘பி’ டீம், ‘சி’ டீம் உருவாகலாம். ஆனால், கடைசியில் டோர்னமென்ட்டில் சாம்பியன் நாங்கள்தான்.
இங்கே திரண்டிருக்கின்ற மதுரை மக்கள் மீதான நம்பிக்கையில் சொல்கின்றேன். அனைத்து மதத்தினரும், அங்காளி, பங்காளியாக பழகுகின்ற, பாசக்கார மதுரை மண்ணிலிருந்து உறுதியாக சொல்கிறேன், தமிழ்நாட்டில், என்றைக்கும் பெரியார் ஏற்றிய, சமத்துவ தீபம்தான் ஒளிரும். உங்களால் அதை தடுக்க முடியாது, எதிர்த்துக் கேட்க ஆள் இருக்கிறது, உள்ளே பெரியார் ஏற்றிய நெருப்பிருக்கிறது. 2026-லும் அதே ஃபயருடன் திராவிட மாடல் அரசு தொடரும்” என்று பேசினார்