இயக்குநர் செல்வராகவனின் ஊக்கமளிக்கும் விடியோ கவனம் பெற்றுள்ளது.
இயக்குநர் செல்வராகவன் திரைப்படங்களில் நடித்து வருவதுடன் அடிக்கடி தன் சமூக வலைதளக் கணக்குகள் வழியாக ரசிகர்களிடம் வாழ்க்கை சார்ந்த தத்துவங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார். முக்கியமாக, ஊக்கமளிக்கும் வார்த்தைகளைத் தொடர்ந்து பேசி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
தற்போது, இன்ஸ்டாகிராமில் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க: அண்ணா தொடர் நடிகருடன் இணைந்த லப்பர் பந்து பட நடிகை!
அதில், “வாழ்க்கையில் தற்கொலை எண்ணம், மன அழுத்த கால கட்டத்தை தாண்டாதவர்கள் இருக்கவே மாட்டார்கள். பல ஆண்டுகளுக்கு முன் நான் ஏழு முறை தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் மன அழுத்தத்தால் அந்த முடிவை எடுத்திருக்கிறேன். ஆனால், சில நாள்களில் என் பிரச்னைகள் முடிந்து மகிழ்ச்சி திரும்பும்போது, இறந்திருந்தால் இதையெல்லாம் அனுபவித்திருக்கவே மாட்டேனே என நினைத்ததுண்டு.
தற்கொலை செய்பவர்கள் பலரும் அடுத்த ஜென்மத்தில் நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் என்றே நினைக்கின்றனர். அதற்காக, இன்னொரு பிறவியில் சுவிட்சர்லாந்தில் பண்ணை வீட்டிலா பிறக்க முடியும்? மன அழுத்தம் இருந்தால் வெளிப்படையாக அதை எதிர்கொள்ளுங்கள். என்ன பிரச்னை என்றாலும் தைரியமாக இருங்கள். எல்லாம் சரியாகும்” என தெரிவித்துள்ளார்.
இந்த விடியோவில் செல்வராகவன் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்தது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.