ஏவிஎம் சரவணன் இன்று காலமானார்: முதல்வர் உள்பட அரசியல் தலைவர்கள் இரங்கல் – Kumudam

Spread the love

திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் ஏவிஎம் நிறுவனத்தின் நிறுவனத்தின் இயக்குநர் ஏவிஎம் சரவணன்,86. இவர் தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவர் இன்று வடபழநியில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். தற்போது ஏவிஎம் ஸ்டுடியோவில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

நடிகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட பல தலைமுறை நடிகர்களின் படங்களைத் தயாரித்துள்ளார்.

நானும் ஒரு பெண், சம்சாரம் அது மின்சாரம், மின்சார கனவு, சிவாஜி, வேட்டைக்காரன், அயன் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்கள் மற்றும் சின்னத் திரை தொடர்களையும் தயாரித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருதுகளைப் பெற்றவர் சரவணன். மேலும், சிறந்த திரைப்படங்களை தயாரித்ததற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.

வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்னைகளால் கடந்த சில ஆண்டுகளாக சரவணன் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள வீட்டில் தங்கியிருந்த சரவணன், இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் ஏவிஎம் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

தலைவர்கள் இரங்கல்

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் : கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் ஏவிஎம்-மின் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார். அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏவி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *