ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால், இந்த முறை ஆசியக் கோப்பை டி20 வடிவில் நடத்தப்படவுள்ளது. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் (துபை, அபு தாபி) நடத்தப்படவுள்ளன. இந்தியாவுக்கான போட்டிகள் அனைத்தும் துபையில் நடைபெறவுள்ளன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்டு விளையாடும் அணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் இடம்பெற்றுள்ளன.