ஐசிசி தரவரிசை: இதுவரை இல்லாத உச்சத்துக்கு முன்னேறிய சிராஜ்!

dinamani2F2025 08 062F04s0ge392FAP25216415947262
Spread the love

இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தனது டெஸ்ட் ஐசிசி தரவரிசையில் உச்ச நிலையான 15-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற ‘ஆண்டா்சன் – டெண்டுல்கா் கோப்பை’ டெஸ்ட் கிரிக்கெட் தொடா், பரபரப்பாக நிறைவடைந்திருக்கிறது.

இந்தியாவும், இங்கிலாந்தும் தொடரை 2-2 என சமன்செய்தது. கடைசி போட்டியில் 301/4 ரன்களிலிருந்து 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தப் போட்டியில் கடைசி இன்னிங்ஸில் முகமது சிராஜ் தீயாக பந்துவீசி 5 விக்கெடுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

உச்சத்துக்கு முன்னேறிய சிராஜ்

பணிச்சுமைக் காரணமாக ஜஸ்ப்ரீத் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இருப்பினும் அவர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

முகமது சிராஜ் 12 இடங்கள் முன்னேறி 15ஆவது இடத்தையும் பிரசித் கிருஷ்ணா 15 இடங்கள் முன்னேறி 59ஆவது இடத்தையும் பிடித்தார்கள்.

இங்கிலாந்து வீரர் கஸ் அட்கின்ஸன் முதல்முறையாக டாப் 10க்குள் இடம்பிடிக்க ஜோஷ் டங்க் 14 இடங்கள் முன்னேறி 46ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

மாட் ஹென்றி 3 இடங்கள் முன்னேறி 4ஆம் இடத்தைப் பிடித்தார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை

1. ஜஸ்ப்ரீத் பும்ரா – 889 புள்ளிகள்

2. ககிசோ ரபாடா – 851 புள்ளிகள்

3. பாட் கம்மின்ஸ் – 838 புள்ளிகள்

4. மாட் ஹென்றி – 817 புள்ளிகள்

5. ஜோஷ் ஹேசில்வுட் – 815 புள்ளிகள்

6. நோமன் அலி – 806 புள்ளிகள்

7. ஸ்காட் போலண்ட் – 784 புள்ளிகள்

8. நாதன் லயன் – 769 புள்ளிகள்

9. மார்கோ யான்சென் – 767 புள்ளிகள்

10. மிட்செல் ஸ்டார் – 766 புள்ளிகள்

(கஸ் அட்கின்ஸன் – 766 புள்ளிகள்)

India pacer Mohammed Siraj has attained a career-best 15th position in the latest ICC Test rankings following his match-winning performance in the fifth and final Test against England at The Oval.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *