ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 27 கடைசி நாள் என்பதால், ஜெய் ஷா போட்டியிடுகிறாரா என்பது இந்த வாரத்துக்குள் தெரிந்துவிடும்.
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். ஒருவருக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யும் பட்சத்தில் டிசம்பர் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.
ஐசிசியின் செல்வாக்குமிக்க முகமாக உள்ள ஜெய் ஷா, நிதி மற்றும் வணிக விவகாரங்கள் துணைக் குழுவின் தலைவராக உள்ளார். ஜெய் ஷா போட்டியிட்டால் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டால், இளம் தலைவர்(வயது 35) என்ற வரலாற்றை படைப்பார்.
இதற்கு முன்னதாக, ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என். சீனிவாசன் மற்றும் ஷஷாங்க் மனோகர் ஆகியோர் ஐசிசியின் தலைவர் பதவியில் இருந்த இந்தியர்கள் ஆவர்.