ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.6,567.11 கோடியாக குறைந்து ரூ.5,11,235.81 கோடியாகவும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மூலதனம் ரூ.4,462.31 கோடியாக குறைந்து ரூ.6,49,489.22 கோடியாகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மூலதனம் ரூ.2,300.50 கோடியாக குறைந்து ரூ.16,88,028.20 கோடியாகவும் உள்ளது.
எனினும் ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பானது ரூ.25,459.16 கோடியாக அதிகரித்து ரூ.8,83,202.19 கோடியாகவும், ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பானது ரூ.12,591.60 கோடியாக அதிகரித்து ரூ.13,05,169.99 கோடியாகவும், ஐடிசி-யின் சந்தை மதிப்பானது ரூ.10,073.34 கோடியாக அதிகரித்து ரூ.5,15,366.68 கோடியாகவும், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.911.22 கோடியாக அதிகரித்து ரூ.5,21,892.47 கோடியாகவும், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.798.30 கோடியாக அதிகரித்து ரூ.9,31,068.27 கோடியாக உயர்ந்தது.
மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இருப்பதை தொடர்ந்து, எச்.டி.எஃப்.சி வங்கி, டி.சி.எஸ், பார்தி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இன்போசிஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஐ.டி.சி மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை உள்ளன.
இதையும் படிக்க: தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்குவதாக இந்தியா, நியூசிலாந்து அறிவிப்பு!