ஐந்து பேரைக் கத்தியால் குத்துவதை லைவ் விடியோவில் காட்டிய இளைஞன்!

Dinamani2f2024 062f0ed85d30 E380 4383 B388 B42bc6ee522d2fani 20240625165332.jpg
Spread the love

துருக்கியில் விடியோ கேம் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞன் கத்தியால் குத்தியதில் ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடமேற்கு துருக்கியில், ஆக. 12, திங்கள்கிழமையில், எஸ்கிசெஹிர் நகரில் உள்ள மசூதியில் தொழுகை நடத்திவிட்டு, சிலர் அருகிலிருந்த ஹோட்டலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில், அங்கு வந்த 18 வயதான இளைஞர், தான் கொண்டு வந்த கத்தியால், அங்கிருந்தவர்களைக் குத்தியுள்ளான்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினரைக் கண்டவுடன், அவர் தப்பியோட முயன்றுள்ளார். ஆனால், காவல்துறையினர் அவனைக் கைது செய்து விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து, அரசு பத்திரிக்கை நிர்வாகம் தெரிவித்ததாவது, “தாக்குதல் நடத்திய ஆர்டா கே, கத்தி, கோடாரி, புல்லட் ப்ரூஃப் உடையுடனும், சட்டையில் சிறு கேமரா ஒன்றையும் பொருத்தி வந்துள்ளார். ஆனால், அவர் கொண்டு வந்த கோடாரியை உபயோகித்ததாய் தெரியவில்லை.

மேலும், தான் தாக்குதல் நடத்தியதை சமூக ஊடகங்களிலும் நேரலையில் ஒளிபரப்பு செய்துள்ளார். தாக்குதலுக்கு ஆளான ஐந்து பேரில் இருவர் மட்டும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்’’ என்று கூறினர்.

தாக்குதல் நடத்திய இளைஞன், விடியோ கேம்களின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *