மேடையில் மட்டும் அல்லாமல் மேடைக்கு வெளியும் சூர்யகுமார் யாதவுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. ஜஸ்பிரித் பும்ரா எந்த நேரமும் மிக அமைதியாக இருப்பார். எதுவும் நடந்தாலும், அது முகத்தில் அதைக் காட்டிக் கொள்ளமாட்டார்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 19-வது ஓவர் வீசும்போதும், வலைப் பயிற்சியில் பந்து வீசுவது போலவே இருந்தது. அந்த அமைதியை நான் மிகவும் பாராட்டுகிறேன், அதை நானும் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்.
நான் 2022 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸில் சேர்ந்தேன். இது எனக்கு நான்காவது சீசன். பல மூத்த வீரர்களுடனும், உள்நாட்டு வீரர்களுடனும் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அது நம்பிக்கையை அதிகரிக்கிறது. ஐபிஎல்லில் சர்வதேச தரத்தில் இருக்கும் பலரை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு பயனுள்ளதாக இருக்கிறது.
2008 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பிரெண்டன் மெக்கல்லம் 150-க்கும் மேல் ஸ்கோர் அடித்தார் என கேட்டேன். அந்த சமயம் எனக்கு கிரிக்கெட் குறித்தே அதிகமாகத் தெரியாது. ஆனால் அப்பாவுடன் பார்த்தேன். 2010ல் தான் விளையாட்டு குறித்து புரிந்துகொள்ளத் தொடங்கினேன்.
2011 ஆம் ஆண்டில் இந்தியா உலகக்கோப்பை வென்றதும், நானும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும். ஒரு பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என கனவு காணத் தொடங்கினேன். அதுவே எனக்கு கிரிக்கெட் அகாதெமிக்கு சென்று பயிற்சி எடுக்கத் தூண்டியதாக தனது நேர்காணலை முடித்தார் திலக் வர்மா.
இதையும் படிக்க: விராட் கோலி, டேவிட் வார்னர் சாதனைகளை முறியடித்த கே.எல். ராகுல்!