ஐபிஎல்-இல் 8,000 ரன்களை கடந்த விராட் கோலி..! வில்லியம்சன் கூறியதென்ன?

Dinamani2f2025 03 222fwm9vwxpn2fpti03212025000389a.jpg
Spread the love

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் விராட் கோலி குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

ஆர்சிபி அணி இதுவரை ஐபிஎல் கோப்பைகளை வெல்லாத அணியாக இருக்கிறது. ஆனால் அவர்களது ரசிகர்கள் சலைக்காமல் அந்த அணி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஐபிஎல் தொடரில் 8,004 ரன்கள் குவித்துள்ளார்.

முதல் போட்டியில் ஆர்சிபி, கேகேஆர் அணி இன்று மோதுகிறது. 36 வயதாகும் விராட் கோலியின் பேட்டிங் குறித்து வில்லியம்சன் கூறியதாவது:

கோலியின் வேட்கை, ஆர்வம் மாறவில்லை

ஓவ்வொரு சீசனிலும் விராட் கோலி எப்படி பெரிய பாதிப்பை ஏற்படுத்துவாரோ அப்படி இந்த சீசனிலும் செய்வார் என்பதில் குழப்பமில்லை.

ஆர்சிபி அணியை எப்படியாவது கோப்பை வெல்லுவதற்கு விராட் கோலி நிச்சயமாக முயற்சிப்பார். இந்தமுறை ஆர்சிபி கிட்டதட்ட அதை நெருங்கிவிடும்.

ஒரு வீரரின் கிரிக்கெட் வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மாதிரி விளையாடுவார்கள்.

விராட் கோலி பல ஆண்டுகளாக ரன்களை குவித்தாலும் அவரது பேட்டிங் ஸ்டைலில் சிறிதுதான் மாறியுள்ளது. ஆனால், ரன்களை குவிக்க வேண்டுமென்ற அவரது வேட்கை, விளையாட்டின் மீதான ஆர்வம் அப்படியே இருக்கிறது என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *