2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் விலைக்கு வாங்கியுள்ளது.
அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சம்; ரூ.26.75 கோடிக்கு ஏலம் போன ஸ்ரேயாஸ் ஐயர்!
இதையொட்டி ஐபிஎல் ஏலமானது இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதில் முதல் ஏலமே ரூ.18 கோடிக்கு அர்ஷ்தீப் சிங்கை ரைட்-டூ-மேட்ச்சை பயன்படுத்தி பஞ்சாப் அணி தக்கவைத்தது.